ADDED : அக் 17, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
கரூர்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில்,
மாவட்ட பொருளாளர் சிவக்குமார் தலைமையில், நெடுஞ்சாலை துறை அலுவலகம்
முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி
நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், கருணை
அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு
ஊதியத்தில், 10 சதவீத ஆபத்து படி, சீருடை சலவைப்படி நிரந்தர
பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர்
செல்வராணி, மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட
செயலாளர் பொன் ஜெயராம், உட்கோட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட, பலர் பங்கேற்றனர்.
