/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலை பகுதியில் சாலையோரம் குப்பை எரிப்பு
/
தான்தோன்றிமலை பகுதியில் சாலையோரம் குப்பை எரிப்பு
ADDED : ஆக 07, 2025 01:19 AM
கரூர், தான்தோன்றிமலை பகுதியில் சாலையோரத்தில், குப்பை எரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில், முக்கிய இடங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இப்பணியாளர்கள் அரசு நிகழ்ச்சி, திருவிழா காலங்களில் தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், மழை நீர் தேங்கியுள்ள இடங்களை சுத்தம் செய்தல், வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதில் மக்கும் குப்பைகளை மண்புழு உரம் தயாரித்து மரக்கன்று உற்பத்தி, விவசாய பயன்பாட்டிற்கு வழங்கி வந்தனர். மக்காத பிளாஸ்டிக் பைகள், இதர குப்பைகளை குடோனில் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அனுப்பினர்.
தற்போது போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஒவ்வொரு ஊராக சென்று, தேங்கி கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. தற்போது காற்று அதிகம் வீசுவதால் குப்பை எரிந்து, சாலை முழுவதும் புகை மண்டலமாக மாறி விடுகிறது. எனவே, உடனடியாக இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.