/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடந்து சென்றவர்களிடம் ரூ.1,000 வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது
/
நடந்து சென்றவர்களிடம் ரூ.1,000 வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது
நடந்து சென்றவர்களிடம் ரூ.1,000 வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது
நடந்து சென்றவர்களிடம் ரூ.1,000 வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது
ADDED : மே 26, 2024 07:13 AM
நாமக்கல் : நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 48. சோடா கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நண்பர் புஷ்பராஜ். இவர்கள் இருவரும், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, எம்.ஜி.ஆர்., நகர் செல்லும் சாலை அருகே உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றனர்.
அப்போது, அங்கு வந்த, இரண்டு வாலிபர்கள், கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேஷ் சட்டை பையில் வைத்திருந்த, 1,000 ரூபாயை வழிப்பறி செய்தனர். அதிர்ச்சியடைந்த இருவரும் சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும், வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகினர். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் ஒருவர், குட்டைமேல தெருவை சேர்ந்த சாயா சக்திவேல், 24 என்பதும், மற்றொருவர் பாவடிதெருவை சேர்ந்த பிரசாத், 31 என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.