/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சேவை தொடக்கம்
/
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சேவை தொடக்கம்
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சேவை தொடக்கம்
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சேவை தொடக்கம்
ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
குளித்தலை: கரூர் மாவட்டம், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 9.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவையை, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த கோவில், 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ளளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில், 6.70 கோடி ரூபாய் செலவில் கம்பிவட ஊர்தி அமைக்-கப்பட்டுள்ளது. மேலும், 2.40 கோடி ரூபாய் செலவில் காத்தி-ருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வச-திகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்தில், 192 பேர் பயணம் செய்ய முடியும். தொடர்ந்து கரூரில், 1.50 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கலெக்டர் தங்கவேல், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பரணிபால்ராஜ் உள்பட பலர் பங்-கேற்றனர்.

