தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 19, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:இரும்பூதிப்பட்டியில், காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, 1 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

குளித்தலை, மணப்பாறை நெடுஞ்சாலையில் இரும்பூதிப்பட்டி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பிளாஸ்டிக் கடை உரிமையாளர் கைலாஷ் என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி, 1 லட்சம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் சுவாதிஸ்ரீ யிடம் ஒப்படைத்தனர்.

சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், மண்டல துணை தாசில்தார் நீதிராஜன் உடன் இருந்தனர். பின்னர், பறிமுதல் செய்த பணம் சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us