ADDED : ஏப் 16, 2026 06:05 AM
குல விளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய், சிறப்பு உதவித்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட, பல்வேறு வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்
அவர் கூறியது, 10 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்குக்கு வரும்.ஆனால், தி.மு.க.,வினர் அறிவித்துள்ள கூப்பனை வைத்து கொண்டு, எந்த கடைக்கு போக முடியும். தி.மு.க., வினர் நடத்தும் கடைக்கு போக சொன்னால், 500 ரூபாய் மதிப்புள்ள பொருளை, 2,000 ரூபாய் என்பார்கள். கூப்பனை கொடுத்து, உங்களை தி.மு.க.,வினர் ஏமாற்ற பார்க்கின்றனர்.
ஏமாற வேண்டாம்
கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன், தி.மு.க., கொடுத்த போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போல, மறுபடியும் ஏமாற வேண்டாம்.
அ.தி.மு.க., அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளுக்கும், பல்வேறு கனவு திட்டங்களை வைத்துள்ளோம். அதை நிறைவேற்ற, நீங்கள் அ.தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்.
உங்களுடன் இருப்பேன்
நான் வெற்றி பெற்றால், சென்னையில் இருக்கும் நாட்களை தவிர, மற்ற நாட்களில் உங்களுடன் இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும், என்னை சந்திக்கலாம். எனது வீடோ, அலுவலகமோ உங்களை வரவேற்க எப்போதும் காத்திருக்கும்.
மரக்கன்றுகள் நடப்படும்
கரூர் மாநகர பகுதிகளில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, அனைத்து தெருக்களிலும் மின் விளக்கு வசதி, முழுமையான பாதாள சாக்கடை திட்டம், சேதம் இல்லாத தார் சாலைகள் அமைக்கப்படும். கரூரை வனப்பகுதியாக மாற்றவும், மழை பொழிவை உண்டாக்கவும், அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படும்.
