/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை
/
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை
ADDED : ஏப் 25, 2025 01:55 AM
குளித்தலை:
அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டது.
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலை மீது இருந்த ஐந்து உண்டியல், நுாற்றுக்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறு உண்டியல்களில் இருந்த, காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது.
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான இளையராஜா முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இதில் கோவில் செயல் அலுவலர் தங்கராஜ், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., மாணவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உண்டியலில், 12 லட்சத்து, 3,000 ரூபாய் மற்றும் 90 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.