/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செயல்படாத நீரூற்றுக்கு ரூ.13 லட்சம் செலவு கரூரில் மக்கள் வரிப்பணம் வீண்

ADDED : செப் 29, 2024 01:30 AM
செயல்படாத நீரூற்றுக்கு ரூ.13 லட்சம் செலவு
கரூரில் மக்கள் வரிப்பணம் வீண்
கரூர், செப். 29-
கரூர் மனோகரா கார்னரில், செயல்படாத நீரூற்றுக்கு, 13 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், பொதுமக்களின் வரிப்பணம், கரூர் மாநகராட்சியில் வீணக்கடிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி பகுதிகளான, மனோகரா கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபா ளையம் உள்ளிட், முக்கிய பகுதிகளில், நீரூற்று அமைக்கும் பணி சில மாதங் களுக்கு முன் தொடங்கியது.
அதில், மனோகரா கார்னரில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையை சுற்றி, 13 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் செலவில் நீரூற்று அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக, ரவுண்டானாவின் அகலம் குறைக்கப்பட்டு, புதியதாக கான்கீரிட் அமைக்கப்பட்டது. நீரூற்று அமைக்கும் பணி முடிந்த நிலையில், சோதனைக்காக நீரூற்று ஒரிரு நாள் செயல்பட்டது. பல மாதங்களாக, நீரூற்று செயல்படாத நிலையில், மின் ஒயர்கள், பிளாஸ்டிக் குழாய்கள் சேதம் அடைந்துள்ளன.
அதன் மூலம், மக்களின் வரிப் பணம் பல லட்ச ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, மனோகரா கார்னரில் நீரூற்றினை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.