ADDED : மார் 19, 2026 07:39 AM
கரூர்:கரூர்
மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில், 14 லட்சத்து, 92 ஆயிரத்து, 140
ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்-யப்பட்டுள்ளது.
கரூர்
மாவட்ட எல்லை மற்றும் முக்கிய சாலைகளில் வரும் வாகனங்களில், சோதனை
மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 3 பறக்கும் படைகள் (36
குழுக்கள்), 36 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்பு
குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலையான கண்காணிப்பு குழு மூலம்,
தேர்தல் நடத்தை விதி-களை நடைமுறைப்படுத்தவும், சட்டவிரோத
பணப்புழக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம்
ரூபாய்க்கு மேல் உள்ள தொகை, மதுபானங்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள்,
வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்படும் பரிசு
பொருட்களான வேட்டி, சேலை, பாத்திரங்கள் போன்றவை பறி-முதல்
செய்யப்படுகிறது.
பறிமுதல் செய்யப்படும் பொருட்க-ளுக்கு உரிய
ரசீது வழங்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட விப-ரங்களை, உடனுக்குடன்
சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலு-வலர் மற்றும் செலவின
பார்வையாளருக்கு தெரிவிக்கப்படுகி-றது.
இதுவரை கரூர்
தொகுதியில், 10 லட்சத்து, 7,640 ரூபாய், அரவக்-குறிச்சியில், 2
லட்சத்து, 30 ஆயிரத்து, 500 ரூபாய், கிருஷ்ணராய-புரத்தில், ஒரு
லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய், குளித்தலையில், 1 லட்சம் ரூபாய் என
மொத்தம், 14 லட்சத்து, 92 ஆயிரத்து, 140 ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
