/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ரூ.23 கட்டுப்படியாகாது; ரூ.25 வழங்கணும்' கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
/
'ரூ.23 கட்டுப்படியாகாது; ரூ.25 வழங்கணும்' கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
'ரூ.23 கட்டுப்படியாகாது; ரூ.25 வழங்கணும்' கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
'ரூ.23 கட்டுப்படியாகாது; ரூ.25 வழங்கணும்' கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 01:49 AM
பள்ளிப்பாளையம், :'சமயசங்கிலியை சேர்ந்த  விவசாயிகள், கரும்புக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி சுற்று வட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, தமிழக அரசு சார்பில் ஒரு கரும்பிற்கு, 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், அரசு அறிவித்த விலையை, அதிகாரிகள் தருவதில்லை. கடந்தாண்டு, ஒரு கரும்புக்கு, 33 ரூபாய் விலை நிர்ணயித்தது. ஆனால், ஒரு கரும்புக்கு, 21 ரூபாய் மட்டுமே அதிகாரிகள் வழங்கினர். இதுகுறித்து கேட்டால், 'ஆட்கள் கூலி, வாடகை' என தெரிவித்து பணத்தை பிடித்துக்கொள்கின்றனர். மேலும், 400 கரும்புகளுக்கு, 40 கரும்பு இலவசமாக பெறுகின்றனர். 'கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடக்கிறது' என, சமயசங்கிலி பகுதி கரும்பு விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் சமயசங்கிலி பஞ்., அலுவலகத்தில் கரும்பு கொள்முதலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க,  பேச்சுவார்த்தை நடந்தது. மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை  டி.ஆர்.ஓ., மல்லிகா தலைமை வகித்தார். இந்த பேச்சுவார்த்தையில், 'ஒரு கரும்புக்கு, 23 ரூபாய் வழங்கப்படும். மீதியுள்ள, 12 ரூபாய் வண்டி வாடகை, ஆட்கள் கூலி' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சமயசங்கிலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:ஒரு கரும்புக்கு, 23 ரூபாய் மட்டுமே தரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை கட்டுப்படி ஆகாததால், ஒரு கரும்புக்கு, 25 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலையிட்டு, கூடுதல் விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

