ADDED : ஏப் 20, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில், தேர்தல் நிலையான பறக்கும்படை
அலுவலர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு வாகன சோதனை ஈடுபட்டனர். மஞ்ச
நாயக்கன்பட்டியில் இருந்து அய்யர்மலை நோக்கி சென்ற டூவீலரை நிறுத்தி
சோதனை செய்தனர்.
அப்போது, வாகனத்தில், 2.65 லட்சம் ரூபாய் ரொக்கம்,
உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்றது தெரிய வந்தது. விசாரணையில்,
மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமானது
என தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்களை
சமர்ப்பிக்காததால், 2.65 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, குளித்தலை
சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுவாதிஸ்ரீயிடம், தேர்தல்
நிலையான பறக்கும் படை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
