/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி: கலெக்டர்
/
நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி: கலெக்டர்
நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி: கலெக்டர்
நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி: கலெக்டர்
ADDED : நவ 02, 2025 01:19 AM
கரூர், நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், பி.சி., எம்.பி.,சி பிரிவினர் 10 பேரை கொண்டு குழுவாக அமைத்து நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க, 3 லட்சம் ரூபாய் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்கள், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம், பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கரூர் கலெக்டர் தலைமை தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தால் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

