/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடியில் ரூ.4.57 லட்சம் பறிமுதல்
/
சிந்தலவாடியில் ரூ.4.57 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 18, 2024 03:00 AM
குளித்தலை: லோக்சபா தேர்தல் தேதி, நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மாவட்டம் முழுதும் சுழற்சி முறையில் பறக்கும் படையினர், வீடியோ பதிவுடன் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிந்தலவாடி பிரிவு சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூரில் இருந்து காரைக்கால் நோக்கி செல்ல அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், காரைக்கால், டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த வடிவேல்ராஜ் என்பவரிடமிருந்து, 4.57 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மீன் விற்ற பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால், அதற்கு உரிய ஆவணம் இல்லாததால், குளித்தலை தாசில்தார் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
* கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில், சண்முகசுந்தரம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, டூவீலரில் வந்த, கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த, மொத்த மளிகை வியாபார கடையில் வேலைபார்த்து வரும் சரவணன் என்பரிடமிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த, இரண்டு லட்சத்து, 6,150 ரூபாயை பறிமுதல் செய்தனர். பின், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முனிராஜிடம் ஒப்படைத்தனர்.

