ADDED : ஜூலை 26, 2025 01:20 AM
கரூர், கரூர் அருகே, நிதி நிறுவனம் நடத்தி முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய, எட்டு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புகழிமலை காம்பளக்ஸில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ் மற்றும் தாய் முகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனாஸ்ஸியர்ஸ், ஸ்ரீ வாரி பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்கள், சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டது. அதில் 150 பேர், ஏழு கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக, கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., ராஜா சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது.
இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக நிதி நிறுவன பங்குதாரர்கள் குழந்தைவேல், 47; நல்லசிவம், 45; சீனிவாசன், நவலடி, 45; சரவணன், 45; கவாஸ்கர், 51; சாந்தி, 37; வீரப்பன், 65; ஆகிய, எட்டு பேரை, கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.