ADDED : டிச 20, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடைக்கு, நேற்று மர்மநபர் ஒருவர் வந்தார். அவர், 'தனக்கு, 9,000 ரூபாய் வேண்டும்; உங்களுக்கு மொபைல் மூலம் பணம் அனுப்புகிறேன். எனக்கு பணமாக கொடுங்கள்' என, தெரிவித்து பணத்தை அனுப்பியுள்ளார். பின், அதற்கான குறுஞ்செய்தியை காண்பித்து, பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். ஆனால், மொபைல் கடைக்காரருக்கு குறுஞ்செய்தி வரவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், ஈரோட்டை சேர்ந்த தனுஷ் என்பவர், போலி ஆப் மூலம் ஏமாற்றி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

