ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.9.50 லட்சம் பறிமுதல்
ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.9.50 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 31, 2026 05:39 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே ஈசநத்தம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி சட்ட
சபை தொகுதிக்குட்பட்ட, ஈசநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை தொடர்ந்து, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரவக்குறிச்சி வட்டம், லிங்கமநாயக்கன்பட்டியை நோக்கி சென்ற காரை சோதனை செய்தனர். அதில் பயணித்த, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த அருண்மணி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி, 9 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட, ரூ.9.50 லட்சத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த தொகையை அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அரவக்குறிச்சி சார்நிலை கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
