ADDED : அக் 07, 2024 03:41 AM
கரூர்: கரூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், அணி வகுப்பு ஊர்-வலம், நேற்று நடந்தது.கரூர் அருகே, கொளந்தானுாரில் இருந்து மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குமாரசாமி தலைமையில் பேரணி, நேற்று மாலை தொடங்கியது. பின், வெற்றி தியேட்டர் சாலை, இ.பி., காலனி, திருச்சி சாலை வழியாக பேரணி, காந்தி கிராமம் பூங்கா பகுதியை அடைந்தது.
பேரணி முடிவில் நடந்த கூட்டத்தில், ஆர். எஸ்.எஸ்., அமைப்பு துவக்கம், இயற்கை பேரிடர் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பா-டுகள் குறித்து, மாநில ஆர்.எஸ். எஸ்., செயற்குழு உறுப்பினர் ஜோதிந்திரன் விளக்கமளித்து பேசினார்.பேரணியில், மாநில பா.ஜ., ஓ.பி.சி., அணி துணைத்தலைவர் சிவசாமி, மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர்கள் ஆறுமுகம், செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர் முருகானந்தம், முன்னாள் செய்தி தொடர்பாளர் மாரிமுத்து, கரூர்
மாநகர ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ்., பேரணியையொட்டி, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது-காப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.