தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

அதில், ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல ஊதியம் வழங்க வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ காப்பீடுகளை வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டும், துாய்மை காவலர்களுக்கு மாதந்தோறும், முறையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார், ஊரக வளர்ச்சி துறை மாநில செயலாளர் பாலசுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் சிங்கராயர், தனலட்சுமி, கிளை செயலாளர் மகேந்திரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us