ADDED : பிப் 10, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
கரூர்: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி முகாம், கரூர் தீயணைப்பு நிலையத்தில் நடந்தது.
அதில், தனியார் ஜவுளி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணை ப்பு வீரர்கள் வரும் வரையிலும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, மாவட்ட தீய-ணைப்பு அலுவலர் சந்திரகுமார் விளக்கம் அளித்து பேசினார்.
முகாமில், மாவட்ட உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன், கரூர் தீயணைப்பு நிலைய போக்குவ-ரத்து அலுவலர் ரவிக்குமார் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த பாதுகாவ-லர்கள் பங்கேற்றனர்.
