/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை
/
ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை
ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை
ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை
ADDED : ஏப் 09, 2024 07:37 AM
எருமப்பட்டி : ரம்ஜான் பண்டிகையையொட்டி பவித்திரம், செவ்வந்திப்பட்டி ஆட்டுச்சந்தையில், 50 லட்சம் ரூபாய்க்கு ஆடு விற்பனை நடந்தது.
எருமப்பட்டி அருகே, பவித்திரம், செவ்வந்திப்பட்டி பஞ்.,ல் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த வாரச்சந்தைக்கு நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வரும், 11ல் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, முசிறி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்ததால் விற்பனை அதிகரித்தது. கடந்த வாரம், 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ரம்ஜான் பண்டிகையால், 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.