/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடை காலம் துவங்கும் முன்பே சூடு பிடிக்கும் இளநீர் விற்பனை
/
கோடை காலம் துவங்கும் முன்பே சூடு பிடிக்கும் இளநீர் விற்பனை
கோடை காலம் துவங்கும் முன்பே சூடு பிடிக்கும் இளநீர் விற்பனை
கோடை காலம் துவங்கும் முன்பே சூடு பிடிக்கும் இளநீர் விற்பனை
ADDED : ஜன 28, 2024 10:55 AM
கரூர்: கோடை காலம் தொடங்க, இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், கரூரில் இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளின், கரையோர பகுதிகளில் தென்னை சாகுபடி நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்தன. மாவட்டத்தில் மழை பெய்யாததால் தென்னை மரங்களில் எதிர்பார்த்த இளநீர் வரத்து இல்லை. இதனால், திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, ஈரோடு, கோவை மாவட்டங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், கோடை காலம் தொடங்க இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இளநீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூர் மாநகராட்சி பகுதிகளில் இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. தற்போது ஒரு இளநீர், 30 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, இளநீர் வியாபாரிகள் கூறுகையில், 'கரூர் மாவட்டங்களில், 60 சதவீதம் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், வெளிமாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று இளநீரை கொள்முதல் செய்து, கொண்டு வருகிறோம். போக்குவரத்து செலவு
உள்ளிட்ட காரணங்களால், இளநீர் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

