/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை
/
தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை
ADDED : ஆக 10, 2024 06:42 AM
கரூர்: கரூர் தலைமை தபால் நிலையத்தில், தேசிய கொடி விற்பனை நேற்று தொடங்கியது.
நாட்டின், 78 வது சுதந்திர தின விழா வரும், 15ல் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், நாடு முழு-வதும் வீடுகளில் தேசிய கொடியை பொதுமக்கள் ஏற்றி வைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்-டுள்ளார்.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையங்களில், தேசிய கொடியை, விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, தலைமை தபால் நிலையத்தில் நேற்று, தேசிய கொடி விற்பனை தொடங்கியது. 25 ரூபாய் மதிப்புள்ள தேசிய கொடியை, பொது-மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மேலும், கரூர் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் வரும், 14 வரை விற்பனை செய்யப்பட உள்-ளது. தேசிய கொடியை அஞ்சல் அலுவலகங்களுக்கு செல்-லாமல், https://www.epostoffice.gov.in/ என்ற இணையதளம் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே, பொதுமக்கள் பெற்றுக் கொள்-ளலாம் என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
தமிழினி தெரிவித்துள்ளார்.