/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி
/
சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி
சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி
சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : அக் 16, 2025 02:04 AM
கரூர், கரூரில் நடந்த த.வெ.க., கூட்டத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட, சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலரின் ஜாமின் மனுவை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், விஜய் தலைமையில் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அதில், மயக்கம் அடைந்தவர்களை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய, சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர்
வெங்கடேஷ் என்பவரை கடந்த, 9ல் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
பிறகு கரூர் ஜே.எம்., -1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும், 23 வரை திருச்சி மத்திய சிறையில், கரூர் டவுன் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வெங்கடேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், வெங்ககேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.