ADDED : ஆக 29, 2026 07:03 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:சேலம்
மாவட்டம், கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் முரளி
கீதபிரியன், 29; இவர், திருச்சியில் உள்ள ஜெனரேட்டர் நிறுவனத்தில்
இன்ஜினியர். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, குளித்தலை அடுத்த
சின்ன பனையூரில் செயல்பட்டு வரும் கார்மெண்ட்ஸ் ஒன்றில் பழுதான
ஜெனரேட்டரை, முரளி கீதபிரியன் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது
அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நங்கவரம் போலீசார்,
முரளி கீதபிரியன் உடலை கைப்பற்றி, குளித்தலை அரசு மாவட்ட தலைமை
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து முரளி கீதபிரியன்
தந்தை மூர்த்தி கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
