/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவுளி பூங்காவை எதிர்க்கும் சேலம் மக்கள் சிப்காட் கழிவுநீர் பாதிப்பை கண்டு அதிர்ச்சி
/
ஜவுளி பூங்காவை எதிர்க்கும் சேலம் மக்கள் சிப்காட் கழிவுநீர் பாதிப்பை கண்டு அதிர்ச்சி
ஜவுளி பூங்காவை எதிர்க்கும் சேலம் மக்கள் சிப்காட் கழிவுநீர் பாதிப்பை கண்டு அதிர்ச்சி
ஜவுளி பூங்காவை எதிர்க்கும் சேலம் மக்கள் சிப்காட் கழிவுநீர் பாதிப்பை கண்டு அதிர்ச்சி
ADDED : டிச 16, 2025 05:49 AM
சென்னிமலை: சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், 184 ஏக்கர் பரப்பளவில் ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு திட்ட-மிட்டுள்ளது. இங்கு, 30-க்கும் மேற்பட்ட சாயப்பட்-டறை அமைய உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று, இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாயக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்ள, சேலம் நீராதார பாதுகாப்பு இயக்க தலைவர் ராஜேந்திரன் தலை-மையில், 300-க்கும் மேற்பட்ட மக்கள், பஸ்கள் மற்றும் கார்களில், பெருந்துறை சிப்காட் பகு-திக்கு நேற்று வந்தனர். சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சி குட்டப்பாளையத்தில் உள்ள, சிப்காட் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு அருகிலுள்ள நல்லா ஓடையை ஆய்வு செய்தனர்.ஓடை நீரை பரிசோதித்தபோது, 1,500 டி.டி.எஸ்., அளவும், தேங்கிய குட்டை நீரில், 7,000 டி.டி.எஸ்., அளவும் இருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்-தனர். மாசடைந்த நீரை பலர் பாட்டில்களில் சேக-ரித்து கொண்டனர். அப்பகுதியில் வீசிய துர்நாற்-றத்தால், இரண்டு பெண்கள் வாந்தி எடுத்துவிட்-டனர்.
இதையடுத்து குட்டப்பாளையம், வேப்பமர திடலில் நடந்த கூட்டத்தில், கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் குமார ரவிக்குமார், 'பெருந்துறை சிப்காட்டால் இப்பகுதி மக்கள் படும் துன்பங்களை கண்முன் காண்கிறோம். இதே நிலை சேலத்துக்கும் வராமல் தடுக்க, ஜவுளிப்-பூங்கா திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும்,' என்றார்.
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., பொது செய-லாளர் ராயல் சரவணன், சிப்காட் பாதிப்பு குறித்து பேசினார். இறுதியாக குழுவினர் புஞ்சை பாலத்-தொழுவு குளத்தை பார்வையிட்டு, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இயக்க ஒருங்-கிணைப்பாளர் சந்திரசேகரை சந்தித்து சேலத்-துக்கு கிளம்பினர்.

