/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் பொங்கல் விழாகரூரில் கோலப்பொடி விற்பனை ஜோர்
/
நெருங்கும் பொங்கல் விழாகரூரில் கோலப்பொடி விற்பனை ஜோர்
நெருங்கும் பொங்கல் விழாகரூரில் கோலப்பொடி விற்பனை ஜோர்
நெருங்கும் பொங்கல் விழாகரூரில் கோலப்பொடி விற்பனை ஜோர்
ADDED : டிச 18, 2024 01:50 AM
கரூர் : பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கலர் கோலப்பொடி விற்பனை, கரூரில் சூடுபிடித்துள்ளது.
வரும் ஜன., 13 முதல், 15 வரை பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்போது மூன்று நாட்களும், வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அப்போது கலர் பொடிகளை, கோலத்தில் பெண்கள் பயன்படுத்துவது வழக்கம்.
மேலும், நேற்று முன்தினம் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல வண்ணங்களில் கோலப்பொடிகள், கரூரில் விற்பனைக்கு வந்துள்ளது.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ஜவஹர் பஜார், உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலர் கோலப்பொடிகள் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட், 10 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.