/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழையால், குல்லா ஸ்வெட்டர் விற்பனை ஜோர்
/
தொடர் மழையால், குல்லா ஸ்வெட்டர் விற்பனை ஜோர்
ADDED : அக் 07, 2025 01:10 AM
கரூர், வடகிழக்கு பருவ மழை தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குல்லா, ஸ்வெட்டர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
வட கிழக்கு பருவமழை காரணமாக கரூர் மாவட்டத்தில், கடந்த, 10 நாட்களாக குளிர்ந்த காற்றும், பரவலாக மழையும் பெய்து வருகிறது. நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால், பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா போன்ற ஆடைகளை வாங்க துவங்கியுள்ளனர்.
இதனால், திருப்பூர், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கரூரில் முகாமிட்டு உள்ளனர். குறிப்பாக, கரூரில் கோவை சாலை, கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த, ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் ஸ்வெட்டர், தலைக்கு அணியும் குல்லா விற்பனை சூடுபிடித்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு ஸ்வெட்டர், 350 ரூபாயில் இருந்து, 850 ரூபாய் வரையிலும், குல்லா, 80 ரூபாயில் இருந்து, 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.