ADDED : ஜூன் 26, 2026 02:18 AM
சேந்தமங்கலம்; சேந்தமங்கலத்தில், சமயபுரம் மாரியம்மன் ரத-யாத்திரை பவனி விழா கடந்த, 3 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1984 மே, 13ம் தேதி அன்று காஞ்சி சங்கராச்சாரியார், சமய-புரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். 42 ஆண்-டுகளாக, கிராமங்களுக்கு இந்த ரத யாத்திரை சென்றுள்ளது.
அதன்படி, இரண்டு தினங்களுக்கு முன்பு சேந்த-மங்கலத்திற்கு சமயபுரம் மாரியம்மன் ரதயாத்-திரை வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், சக்தி விநா-யகர் கோவில் மற்றும் சிவன் கோவிலில் மாரி-யம்மனை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக சுற்று வட்டாரத்தில் உள்ள பெண் பக்-தர்கள், அவர்களது கைகளால் சமயபுரம் மாரியம்-மனுக்கு மஞ்சள், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர், பச்சரிசி மாவு உள்பட, 10 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
