ADDED : செப் 26, 2024 02:05 AM
குளித்தலை: குளித்தலை, தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளில், சம்பா நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில், ஆற்று பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனுார், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வட-சேரி, ஆலத்துார்,
பாதிரிப்பட்டி உட்பட, 17 பஞ்., கிணறு, ஆழ்-குழாய் கிணறுகள் மற்றும் குளத்து பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதேபோல், கடவூர் யூனியனில், 20 பஞ்., கிணறு மற்றும் குளத்து பாசன
விவசாய நிலமாக உள்ளது.இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து, மாயனுார் கட்டளை மேட்டுவாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்-டுள்ளது. இதனால் ஆற்றுப்பாசன விவசாயிகள் மற்றும் ஆழ்-குழாய்
கிணறுகள் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி பணி-களில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கிணற்று பாசன விவசாயிகளும் சம்பா சாகுப-டிக்கு விதைநெல்
தெளித்து நாற்று உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, நடவு பணிகளை தொடங்கிய விவசாயிகள், வயலுக்கு கற்பூரம் காண்பித்து நாற்று நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்-ளனர்.

