sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சம்பா நெல் நடவு பணி தீவிரம்

/

சம்பா நெல் நடவு பணி தீவிரம்

சம்பா நெல் நடவு பணி தீவிரம்

சம்பா நெல் நடவு பணி தீவிரம்


ADDED : செப் 26, 2024 03:25 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பா நெல் நடவு பணி தீவிரம்

குளித்தலை, செப். 26-குளித்தலை, தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளில், சம்பா நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில், ஆற்று பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனுார், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசேரி, ஆலத்துார், பாதிரிப்பட்டி உட்பட, 17 பஞ்., கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்து பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதேபோல், கடவூர் யூனியனில், 20 பஞ்., கிணறு மற்றும் குளத்து பாசன விவசாய நிலமாக உள்ளது.இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து, மாயனுார் கட்டளை மேட்டுவாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றுப்பாசன விவசாயிகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கிணற்று பாசன விவசாயிகளும் சம்பா சாகுபடிக்கு விதைநெல் தெளித்து நாற்று உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, நடவு பணிகளை தொடங்கிய விவசாயிகள், வயலுக்கு கற்பூரம் காண்பித்து நாற்று நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us