/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி-வெள்ளாறு வாய்க்காலில் மணல் போக்கி மதகுகளில் மணல் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு
/
காவிரி-வெள்ளாறு வாய்க்காலில் மணல் போக்கி மதகுகளில் மணல் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு
காவிரி-வெள்ளாறு வாய்க்காலில் மணல் போக்கி மதகுகளில் மணல் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு
காவிரி-வெள்ளாறு வாய்க்காலில் மணல் போக்கி மதகுகளில் மணல் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜூலை 17, 2025 01:37 AM
கரூர்,
கரூர் அருகே, காவிரி-வெள்ளாறு வாய்க்காலில், மதகுகளில் மணல் தேங்கி தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், மணல் போக்கி கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மதகு களில் மணல் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு விரைவில் தீர்வு ஏற்பட உள்ளது.
கரூர் மாவட்ட காவிரியாற்றில், மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, அமராவதி அணை மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீர் கலக்கிறது. வெள்ளக்காலங்களில் காவிரி யாற்றின் மூலம், தண்ணீர் கடலில் சேருவதை தடுக்கும் பொருட்டும், வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கவும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம், நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.
முதல் கட்டமாக, கரூர் மாவட்டம் மாயனுார் கதவணை கட்டளை முதல், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை, வாய்க்கால் வெட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக, கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் திருகாம்புலியூர் கிராமத்தில், 50 ஏக்கர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மகாதானபுரம் வடக்கு, தெற்கு, சிந்தலவாடி, பிள்ளப்
பாளையம் ஆகிய கிராமங்களில், நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்தது.
முதலில், மாயனுார் கதவணை தென்கரை வாய்க்காலை இணைக்கும் வகையில், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், 41 கிலோ மீட்டர் துாரம் வாய்க்கால் வெட்டும் பணி, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 2021 மார்ச் மாதம், 172 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது. குறிப்பாக, 100 மீட்டர் அகலத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து, மாயனுார் தென்கரை வாய்க்காலில், தண்ணீரை பிரிக்கும் வகையில், இரும்பு ஷட்டருடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால் ஆழப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துதல், தடுப்பு மற்றும் வாய்க்கால் கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது, மழைக்காலங்களில் உபரி நீரை வெள்ளாறு வாய்க்காலில் திறக்கும்போது, அதிகளவில் மணல் அடித்து வரும். அப்போது, மதகுகளில் மணல் நிரம்பி தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாயனுார் அம்மா பூங்கா அருகே, தென்கரை வாய்க்காலில் இருந்து, வெள்ளாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் இடத்தில், மணல் போக்கிகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.