ADDED : ஏப் 17, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி, 29. நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து, பொலிரோ பிக்கப் சரக்கு வாகனத்தில், மணலை கடத்திக் கொண்டு சென்றார். கட்டளை மலையப்ப
புரம் காவிரி ஆற்று சாலையில், வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி, மாயனுார் போலீசார் சோதனை செய்தனர். அதில், 1 யூனிட் காவிரி ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.
மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்ததுடன், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
