ADDED : டிச 12, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, சிந்தாமணிப்பட்டி பகுதியில் வி.ஏ.ஓ., தமி-ழரசி தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த டிப்பர் டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில், இரண்டு யூனிட் மணல் அரசு அனுமதி இல்லாமல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
டிப்பர் டிராக்டரை ஓட்டி வந்த, திருச்சி மாவட்டம், திருவருட்-சோலை குமார், 25, என்பவரையும், வாகனத்தையும் பிடித்து, சிந்-தாமணிபட்டி போலீசில் ஒப்படைத்தனர் .சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குபதிந்து, டிரைவர் குமாரை கைது செய்தனர்.

