ADDED : டிச 12, 2025 08:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக இரவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகி-றது. இந்நிலையில், லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே, காவிரி ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் மகேந்திரா பொலிரோ பிக்கப் சரக்கு வாகனத்தில், 30 மணல் மூட்டை கடத்தியது தெரிய வந்தது.
லாலாப்பேட்டை போலீசார், சரக்கு வாகன டிரைவர் பாலக்-குமார், 26, மீது வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை பறி-முதல் செய்தனர். மேலும் மணல் கடத்திய அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

