/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயலுாரில் துாய்மை பணி தொழிலாளர்கள் தீவிரம்
/
வயலுாரில் துாய்மை பணி தொழிலாளர்கள் தீவிரம்
ADDED : அக் 13, 2024 08:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வயலுார் கிராமத்தில், துாய்மை பணிகள் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி, சரவணபுரம் ஆகிய
இடங்களில் சாலையோரம் வளர்ந்த செடிகள் முழுவதும் அகற்றப்பட்டது. மேலும் சாலை பகுதியில்
வீணான கழிவு குப்பை அகற்றப்பட்டது. மேலும், சாலையோர இடங்களில் வளர்க்கப்படும் மரங்கள்
பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இப்பணிகளில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மழை
காலம் என்பதால் துாய்மை பணி செய்யப்பட்டுள்ளது.