தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்


ADDED : செப் 09, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் அமைப்பு சார்பில், பொருளாளர் கருணாநிதி (சி.ஐ.டி.யு.,) தலைமையில், மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று இரண்டாவது நாளாக, காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கரூர் மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிறு விடுமுறை விட வேண்டும், பி.எப்., - இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.நேற்று காலை, இரண்டாவது நாளாக போராட்டம் தொடங்கியது. அப்போது, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன், துாய்மை பணியாளர்களை சந்தித்து, முதல்வர் கவனத்துக்கு போராட்டம் குறித்த தகவல் சென்றுள்ளது. 20 நாட்கள் நேரம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரை தொடர்ந்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன், துாய்மை பணியாளர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். பின் அவர் கூறுகையில், '' இரண்டு நாட்களில், துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாத பட்சத்தில், துாய்மை பணியாளர்களின் போராட்டத்தில், அ.தி.மு.க.,வும் பங்கேற்கும்,'' என்றார்.தொடர்ந்து, நா.த.க., வழக்கறிஞர் பேரவை செயலாளர் நன்மாறன், வி.சி.க., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுடர்வளவன், ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வீடுகளில் தேங்கிய குப்பை

கடந்த இரண்டு நாட்களாக, 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், போராட்டத்தில் உள்ளதால், வீடுகளில் குப்பை தேங்கியுள்ளது. ஆனால், சாலைகளில் தேங்கிய குப்பையை, 100க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள் அகற்றும் பணியில்ஈடுபட்டனர்.

மாநகராட்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட துாய்மை பணியாளர்கள், ெஷட் போட நேற்று காலை முயன்றனர். அதை, போலீசார் அனுமதிக்கவில்லை. அதேசமயம், துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார் தண்ணீர் பாட்டில் வழங்கினர். தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us