ADDED : ஜூலை 31, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கோவக்குளம் கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவக்குளம் கிராமத்தில் டவுன்
பஞ்சாயத்து சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. மழைக்கால துவக்கத்தை
முன்னிட்டு, குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணி
மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள்,
அகற்றப்பட்டன. கழிவுநீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர்
தெளிக்கப்பட்டது.
நல்ல குடிநீர் மூடி வைக்கப்பட்டது.
இப்பணிகளில் பஞ்சாயத்தில் உள்ள துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இப்பணிகளை டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம்
பார்வையிட்டார்.
