ADDED : ஆக 08, 2026 06:05 AM
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி நகராட்சி துாய்மை பணியாளர்கள், அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பள்ளப்பட்டி
நகராட்சியில், தற்போது அவுட்சோர்சிங் முறையில், 68 துாய்மை
பணியாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பை அகற்றுதல், தெரு துாய்மை
உள்ளிட்ட பணிகளை தினமும் மேற்கொண்டு வரும் இவர்கள், தங்களுக்கு அரசு
நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை என
குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது தினக்கூலியாக, 450 ரூபாய்
மட்டுமே வழங்கப்படுவதாகவும், இது அரசின் நிர்ணயிக்கப்பட்ட
ஊதியத்தை விட குறைவானது என்றும் தெரிவிக்கின்றனர். எனவே, அரசு
அறிவித்துள்ள ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், பணியாளர்களின்
நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள
வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு
போராட்டத்தை நடத்தினர்.
