sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்

/

வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்


ADDED : ஜன 13, 2025 03:30 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'வேலைவாய்ப்பு இல்லாமல், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்தி-ருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுக-ளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்க-ளுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்-றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்க-ளுக்கு, 600 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய்- வீதம், 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படு-கிறது.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வரு-மான உச்ச வரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறு-வனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவ-ணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்-துள்ளார்.






      Dinamalar
      Follow us