/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்த பள்ளி மாணவர்கள்
/
ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்த பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்த பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்த பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 05, 2025 01:02 AM
கரூர் :கரூர், கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமை வகித்தார். மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5 (இன்று), ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம் பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்து கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணி. அப்படிப்பட்ட தெய்வீக பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக உள்ளவர்கள்தான் ஆசிரியர்கள். எனவே, மாணவ, மாணவியர், கற்பித்த ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து மற்றும் நன்றி கூறினர்.