/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரவக்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : மார் 01, 2026 08:27 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். மாணவர்களுடைய பல்வேறு அறிவியல் சிறந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு, பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. முதியோர்களுக்கு உதவும் மின் துாக்கி, காஸ் லீக்கேஜ் டிடெக்டர், மழைநீர் சேகரிப்பு, நுண்ணோக்கி, தண்ணீரை சுத்தமாக்கும் கருவி, மிருக காட்சிசாலை, விபத்து எச்சரிப்பான் என்பன போன்ற, 106 படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மேலும் சர்.சி.வி.ராமன், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் வீர முத்துவேல் மற்றும் பல விஞ்ஞானிகளின் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்வு, மாணவர்களை இன்ஸ்பயர் அவார்டு எனப்படும், அறிவியல் புத்தாக்க விருது நிகழ்ச்சிக்கு தேர்வு செய்வதற்கு முன்னோட்டமாக அமைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராபியாபஸ்ரி செய்திருந்தார்.
மாணவர்களுடைய படைப்புகளை ஊக்கமளிக்கும் வகையில் காயத்ரி, ரொகையா பீவி, கவிதா, கிருஷ்ணவேணி, புவனேஸ்வரி, ஜோதிமணி, ஷபான் தஸ்லிம் ஆகியோர் படைப்புகளுக்கு வழிகாட்டி ஆசிரியர்களாக செயல்பட்டனர். மகிழ்முற்ற செயலாளர் ஷகிலா பானு நன்றி கூறினார். மாணவர்களின் அறிவியல் படைப்புகளை, வட்டாரக்கல்வி அலுவலக பணியாளர்கள் மகாலிங்கம், ஜான்சி, நாகதேவி, பாபு லோகேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

