ADDED : ஜன 18, 2026 06:08 AM

அ நிறம் | அளவு
கரூர்: கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், 12 வது நாளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத்-தலைவர் சங்கரேஸ்வரி உள்பட, 30க்கும் மேற்-பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
