ADDED : ஜன 28, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி உள்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
