ADDED : ஆக 23, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த சேர்வக்காரன்பட்டி பஸ் நிறுத்தத்தில், கடவூர் நடுத்தெருவை
சேர்ந்த சக்திவேல், 60, என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட,
லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தார்.
அங்கு வந்த எஸ்.எஸ்.ஐ.,
சுசிந்தரசித், அவரை பிடித்து விசாரணை செய்தார். பின்னர், அவரிடம்
இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 200 ரூபாயை
பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாலவிடுதி போலீசார், சக்திவேலை கைது
செய்தனர்.
