/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வண்டல் மண் கடத்தல்; டிராக்டர் டிப்பர் பறிமுதல்
/
வண்டல் மண் கடத்தல்; டிராக்டர் டிப்பர் பறிமுதல்
ADDED : செப் 13, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., அ.உடையாப்பட்டி பஸ் ஸ்டாப்பில், குளித்தலை தாசில்தார் சுரேஷ் நேற்று முன்தினம் மாலை ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, அதிவேகமாக வந்த டிராக்டர் டிப்பர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
உரிய அனுமதி இன்றி பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பரில், ஒன்றரை யூனிட் வண்டல் மண்ணை கழுகூர் ஏரியிலிருந்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கழுகூர் வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்ட தர்மராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.