/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சீமைக்கருவேலம் மரம் அகற்றும் பணி தீவிரம்
/
சீமைக்கருவேலம் மரம் அகற்றும் பணி தீவிரம்
ADDED : மே 23, 2024 06:46 AM
கரூர் : கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றும் பணி மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
வெள்ளியம்பாளையம், ஆரியூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் புதியதாக மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு அதை நன்கு பராமரிக்க வேண்டுமெனவும், சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றப்படும் பணியை உரிய கால அளவில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

