/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுய ஆட்சி இந்தியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
சுய ஆட்சி இந்தியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 12, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, சுய ஆட்சி இந்தியா கட்சி சார்பில், மாவட்ட தலைவர் வேலு தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலை, தி.மு.க., அரசு உடனடியாக நடத்த வேண்டும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், சிறப்பு அதிகாரிகளால் மக்கள் பணியை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மக்கள் கோரிக்கை மனுக்களை கொண்டு செல்ல முடியுமா என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஜானகி, நந்தகுமார், சிவா, சரவணன், மஞ்சுளா, பாக்கியம், ராஜசேகர், முல்லையரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

