/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் வெள்ளரி விற்பனை
/
கிருஷ்ணராயபுரத்தில் வெள்ளரி விற்பனை
ADDED : பிப் 21, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அருகே யுள்ள பாப்பகாப்பட்டி, தேசிய மங்களம், சிவாயம், வேப்பங்குடி,
பஞ்சப்பட்டி, சேங்கல் ஆகிய இடங்களில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
வெள்ளரி பிஞ்சுளை விவசாயிகள் அறுவடை செய்து லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம்,
பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் பஸ் ஸ்டாப் அருகில் வைத்து விற்பனை செய்து
வருகின்றனர். ஒரு வெள்ளரி, 10 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. வெயில் காலம்
துவக்கம் என்பதால், வெள்ளரி பிஞ்சு விற்பனை சூடுபிடித்துள்ளது.

