ADDED : ஜன 28, 2026 06:18 AM

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், மாயனுார், காட்டூர், எழுதியாம்பட்டி, செக்கணம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் சாகுபடியில் விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, செண்டுமல்லி ஆகிய ரக பூக்கள், தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த செடிகளுக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. செடிகளில் பூக்கள் நன்கு செழித்து வளர்வதால்பறிக்கப்பட்டு குளித்தலை, முசிறி, திருச்சி, கரூர், ஆகிய பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது விரிச்சிப்பூ கிலோ, 50 ரூபாய், செண்டுமல்லி கிலோ, 30 ரூபாய், சின்ன ரோஜா, 80 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தை மாதம் முதல் பூக்கள் சீரான விலையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
