/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரத்தான், வாக்கத்தான் போட்டி செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு
/
மாரத்தான், வாக்கத்தான் போட்டி செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு
மாரத்தான், வாக்கத்தான் போட்டி செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு
மாரத்தான், வாக்கத்தான் போட்டி செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு
ADDED : நவ 10, 2025 02:04 AM
கரூர்: கரூர், திருவள்ளுவர் மைதானத்தில், சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில், மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி நேற்று நடந்தது. கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சரு-மான செந்தில்பாலாஜி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரியவர்களுக்கான மாரத்தான் போட்டி, 10 கி.மீ., 5 கி.மீ., பிரி-விலும்; சிறுவர்களுக்கான (8 வயது முதல் 14 வயதிற்குள்) மாரத்தான் போட்டி, 5 கி.மீ., பிரிவிலும் நடந்தது. பெரியவர்க-ளுக்கான வாக்கத்தான் போட்டி, 3 கி.மீ., பிரிவில் நடந்தது. இப்-போட்டியில் ஆண், பெண், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்-கானோர் பங்கேற்றனர்.மாரத்தான் போட்டிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகிய-வற்றுடன் முதல் பரிசாக, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 5,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 3,000 ரூபாய், நான்காம் பரிசாக கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியில், கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா, சி.ஐ.ஐ., மாவட்ட தலைவர் பிரபு உள்பட பலர் பங்கேற்-றனர்.

